புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோவிலில் தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். அங்கு, கோயிலுடன் தொடர்பில்லாத மேலப்பனையூர் கிராமத்தை சேர்ந்த சிலர் கோவில் விழாவில் முதல்மரியாதை வேண்டும் என தகராறு செய்வதாக, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குலமங்கலத்தைச் சேர்ந்த சுப்பையா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், ‘ கடவுள் முன்னர் அனைவரும் சமமே. கடவுள் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. குறிப்பிட்ட தேதியில் திருவிழாவை திட்டமிட்டு நடத்தலாம்.’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…