தடை செய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் எப்படி செயல்படுகிறது.?! ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி.!

Default Image

மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரபட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ தடைசெய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் விளையாட்டு எப்படி செயல்படுகிறது?’என சரமாரி கேள்வி கேட்டு உள்ளனர்.   

மதுரை உயர்நீதி மன்றத்தில் நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்கிற பெண் ஓர்  ஆட்கொணர்வு வழக்கை பதிவு செய்து இருந்தார். அதில் தனது மகள் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறார். அவளுக்கு  ஃப்ரீ ஃபயர் விளையாட்டின் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த ஜாஃப்ரின் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. ஜாஃப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் என் மகளை கடத்தி சென்றுவிட்டனர் என சந்தேகம் எழுகிறது. அவளை கண்டறிந்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தகோரி வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

   இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிர்ச்சியடைந்துள்ளது. நீதிபதி கூறுகையில், ‘ தடை செய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் இன்னும் எப்படி செயல்படுகிறது.?  காவல்துறை , சைபர் கிரைம் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.? ‘என சரமாரி கேள்வி கேட்டுள்ளார் நீதிபதி. இன்று தான் விசாரணை தொடங்கியுள்ளதால், அடுத்தடுத்த நீதிமன்ற விசாரணைகளில், காவல்துறை மற்றும் சைபர் துறை பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்