நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை…!

நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை.
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீபா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு வார்டு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மதுரையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனிமைப்படுத்தும் பகுதி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை எச்ஓடி மருத்துவரான டாக்டர் நடராஜன் கூறுகையில் தற்போது எங்களிடம் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், வைரசால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த 20- படுக்கைகளை கொண்ட சிறப்பு வார்டை ஒதுக்கி உள்ளோம் என்றும், அனைத்து படுகைகளிலும் மானிட்டர், வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிப்பா வைரஸ் அறிகுறிகள் இதுகுறித்து கூறுகையில், இது வைரஸ் தொற்று என்று அழைக்கப்படுகிறது. எனவே இது காய்ச்சல், உடல் வலி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளாக வெளிப்படும். இந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டல அமைப்பு அதிகமாக பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பல மொட்டுகள், பூனைகள், நாய்கள் மற்றும் வீட்டு பன்றிகளிடம் இருந்து பரவுகிறது. மனிதனுக்கு மனிதன் பரவக்கூடிய சக்தி கொண்டது என்ற தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025