மதுரை பட்டாசு ஆலை வெடி விபத் தில், பட்டாசு ஆலை மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், காட்டுப்பகுதியில் பட்டாசு அலை இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வருகிற நிலையில், பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் பட்டாசு ஆலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மதுரை டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர், போர்மேன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட போர்மேன் சுந்தரமூர்த்தி 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…