மதுரை; உயிரிழந்தவருக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு
மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்.
மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று முன்தினம் மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பவர் பள்ளத்தில் சிக்கி, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், மூன்று மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தியினைக் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.