மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 5ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் முகூர்த்த கால்நட்டுதல் விழாவோடு கோலாகலமாக துவங்கியது. வரும் மே மாதம் 5 ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளாமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். இந்த கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் அறிவித்துள்ளார்.