மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

Madurai Temple Festival

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8, 2025 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் உணவு, நீர், மோர் வழங்க அனுமதிச்சான்று பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும். அன்னதானம், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.

உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை (Whatsapp No.) எண். 9444042322-ல் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்