மதுரை, திண்டுக்கல்லில் வருமான வரித்துறை சோதனை!
மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை.
தமிழகத்தில் சென்னை, தேனி, திருச்சி, பழனி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த சோதனையின் போது கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வடமலையான் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக முறையான வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்த நிலையில், சோதனை நடைபெற்று வருகிறது. வடமலையான் மருத்துவமனையில் உள்ள ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.