யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கியது மதுரை மாவட்ட நீதிமன்றம் ..!

டிடிஎஃப் வாசன் : காரை வேகமாக ஒட்டிய வழக்கில் கைதாகி இருந்த யூட்யூபரான டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்க்காக காவல் துறையினரால் ஆஜர்படுத்தபட்டார்.
மேலும், காவல் துறையினர் பதிந்த வழக்குகளின் மூலம் இவருக்கு ஜாமீன் கிடைக்காது என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு ஜாமீன் அளித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் டிடிஎஃப் வாசன் தரப்பில், “டிடிஎஃப் வாசன் காரை இயக்கியதால் எந்த விதமான பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் வேகமாக காரை இயக்கி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக பொதுமக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும்.
அவர் வளர்ந்து வரும் இளைஞர் எனவும் மேலும், வருகிற மே-4 ம் தேதி அவர் படத்தில் நடிக்க இருப்பதாலும் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்” எனவும் வாசன் தரப்பில் வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள் இறுதியாக வாசனை, நீதிமன்றத்துக்கு மன்னிப்பு கடிதம் ஒன்று எழுதி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு அவருக்கு ஜாமீன் அளித்துள்ளார்.
மேலும், “தான் திருந்தி வாழ்ந்து வருவதாகவும், என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்” என டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார். இதனால், டிடிஎஃப் வாசனை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி அவர்கள் கண்டித்து மன்னிப்பு கடிதம் எழுதி கேட்டதுடன், ஜாமீனும் வழங்கி உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025