#மூடிய காரணம்- 120 தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்!
எந்தவொரு காரணமும் இன்றி மதுரை மாவட்டத்தில் மூடப்பட்ட 120 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளது. தற்போது இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கின்ற பொழுது மதுரை மாவட்டத்தில் சுமார் 120 தனியார் மருத்துவமனைகள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டுள்ளன.
இதனால் மூடப்பட்ட மருத்துவமனைகளுக்கு எல்லாம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் வினய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகளை மூடாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு தனியார் மருத்துவமனைகளை மூடினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி மிக கடும் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்றும் மாவட்ட ஆட்சியர் வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.