மதுரை சித்திரை திருவிழா : இவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும்..! – மாவட்ட ஆட்சியர்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவில், “அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தினை” கண்டுகளிக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி இடவசதி சிறப்பாக ஏற்பாடு செய்யவும், இவ்வாய்ப்பினை ஆண்டு தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் அனுமதிக்கப்படும் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
எனவே மதுரை மாவட்டத்தில் வரும் 16.04.2022 அன்று நடைபெறும் “அருள்மிகு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு” 40 மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்கவும், இந்நிகழ்வினை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் துறை, மதுரை மாநகராட்சி மற்றும் காவல் துறையும் இணைந்து செயல்பட இதன் மூலம் ஆணையிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.