மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தது.
அதேபோல் பெண் அதிகாரி மற்றும் அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையரையும் மாற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் உதவி காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பின் வழக்கு விசாரணை வரும் 30-க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…