விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை! காரணம் இதுதானா?

Default Image

விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை.

இன்றைய இளைஞர்கள் பலரும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடும், அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், தங்களது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர், தமிழகத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய  என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் சிலர், மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், தங்களது பாக்கெட்டுகளை நிரப்புவதில் தான் கவனம்  செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும், இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரதீப் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா, ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நவ.19-ம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi
4 year old child died
TNGovt - mathiazhagan mla