சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மீது ட்ரோன்கள் பறக்க தடை..!
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் செயல்படும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்காக உயர்நீதிமன்றத்தை ட்ரோன் மூலம் படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், படம் எடுத்தவர் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின் தற்போது விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.