9 மாதம் தான் டைம்… மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த பணியின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. திடிரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக ஸ்ரீ ராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது தலைமையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 2 கட்ட அகழாய் பணிகள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் தாக்கல் செய்தார். பின்னர் ஸ்ரீ ராமன் தலைமையில் கீழடியில் 3-ம் கட்ட அகழாய் பணிகள் நடைபெற்றது. 3-ம் கட்ட அகழாய் போது குறிப்பிடும் அளவிற்கு எந்த முக்கிய பொருள்களும் கிடைக்கவில்லை.
READ MORE-விஜயதரணியை தொடர்ந்து அடுத்து பாஜகவில் இணைவது யார்..? சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை, வானதி சீனிவாசன்..!
பின்னர் தமிழக அரசு 4 கட்ட முதல் 9-ம் கட்ட அகழ்வாய் பணிகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த முதல் இரண்டு கட்ட அறிக்கையை மத்திய அரசு வெளியிடு உத்தரவிடக்கோரி மதுரை சார்ந்த பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
READ MORE- விவசாயி மீது தாக்குதல்.. காவல்துறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர்
READ MORE- 554 ரயில் நிலையங்கள்… 1,500 ரயில்வே மேம்பாலங்கள் திட்டப்பணிகள்.! பிரதமர் மோடி துவக்கம்.!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை 9 மாதத்திற்குள் வெளியிட மத்திய அரசுக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது