ஆ.ராசா பற்றிய கேள்வி.. வம்பு இழுத்துவிடாதீங்க.! கோபத்தில் எழுந்து சென்ற மதுரை ஆதீனம்.!
விழுப்புரத்தில், ஆ.ராசா பற்றிய கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்து, என்னை வம்பில் மாட்டிவிட பாக்குறீங்களா என அங்கிருந்து சென்றுவிட்டார்.
சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் பற்றியும், மனு ஸ்மிருதி மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சில கருத்துக்களை கூறினார்.
ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. கோவையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரத்தில், மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் ஆ.ராசா கூறிய கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு மதுரை ஆதீனம், ‘ இந்த கேள்வவிக்கு நான் ஏதும் சொல்றதுக்கு இல்ல. நீங்க வம்பு விலைக்கு வாங்குறீங்க. ‘ என கூறினார். மேலும் நிருபர்கள் கேட்கவே, ‘ நீங்க வம்பு இழுத்து விடுறீங்க. நானா உங்களை (பத்திரிகையாளர்களை) கூப்பிட்டேன்.’ என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் மதுரை ஆதீனம்.