மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முகூர்த்தக்கால் நடப்பட்டது..!

அலங்காநல்லூரில் வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டுள்ளது.
தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக நடைபெறும் நிகழ்வு தான் ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது, ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும், காளைகள் மற்றும் காலை உரிமையாளருக்கு வெகுமதியான பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அலங்காநல்லூரில் வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டுள்ளது. அதன்படி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விழாவில் அரசின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காமல் ஊர் விழா குழுவினர் மட்டும் முன்னேற்பாடு பணிகளை துவக்கினர். மேலும், அரசு வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.