மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ 1,264 கோடியில் இருந்து ரூ.2000 கோடியாக உயர்வு!
மதுரையில் அமைய உள்ள ‘எய்ம்ஸ்‘ திட்டத்தின் மதிப்பீடு, 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா என்பவர் தகவல்களை கோரினார்.அதன்படி மத்திய சுகாதாரத்துறை அளிக்கப்பட்டுள்ள தகவலில் ,எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2000கோடியில் 85% நிதித்தொகையை ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடன் உதவியாக அளிக்கிறது.இதற்கான கடன் ஒப்பந்தம், மார்ச்சில் கையெழுத்தாகிறது.