மதுரை எய்ம்ஸ்-காக மத்திய அரசு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது RTI அறிக்கையில் அம்பலம்.
RTI அறிக்கையில் அம்பலம்:
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளிலேயே மதுரையில் அமையவிருக்கும் கட்டிடத்திற்கு மட்டும் 1%-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது RTI அறிக்கையில் அம்பலமானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1,977 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக RTI அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
மதுரை எய்ம்ஸ்க்கு 1 சதவீதம்:
மத்திய அரசு ஒதுக்கிய ரூ.12.35 கோடி என்பது ஒட்டுமொத்த மதிப்பீடான ரூ.1,977 கோடியில் 1 சதவீதத்துக்கும் குறைவானது. கடந்த 2015-ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட 4 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை என பல்வேறு குற்றசாட்டிகள் எழுந்துள்ளது.
பிலாஸ்பூர் எய்ம்ஸ்:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு மாற்று இடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே, மதுரையுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்ட இமாச்சலம் பிலாஸ்பூர் எய்ம்ஸ்-க்கு மத்திய அரசு இதுவரை ரூ.1,407 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கட்டுமான பணி தொடங்காத நிலையில் பிலாஸ்பூரில் பணி முடிந்து கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு ஒதுக்கிய ரூ.12 கோடியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி உள்ளிட்டவை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…