மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவு – ஜே.பி நட்டா

Default Image

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்ததும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஜே.பி நட்டா தகவல்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது என்றும் கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் கூறினார். மேலும், மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை; மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்