#BREAKING: மதுரை எய்ம்ஸ் – ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் வகுப்புகள்..!
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடிதொடங்கி கடந்த ஜனவரி மாதம் வைத்தார். இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 50 இடங்களுக்கான வசதிகள் அனைத்தும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பயில தேர்வான மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுகின்றன.மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.