5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடக்கம்!
Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு.
கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார்.
Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
ஆனால், அடிக்கல் நாட்டியத்தை தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், விமர்சனத்துக்கு உள்ளானது. மத்திய பாஜக அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனிடையே, எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான திட்ட மேலாண்மை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டு, ஒப்பந்தம் புள்ளி கோரப்பட்டது. இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து அண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி நிர்வாகம் விண்ணப்பித்தது.
Read More – உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம்
அதன்படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவர்களுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்று வாஸ்து பூஜையுடன் தொடங்கியுள்ளது.
கட்டுமான பணிக்காக ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியுள்ள, வாஸ்து பூஜையுடன் பணிகளை தொடங்கியுள்ளது. 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுப்பான பணிகளை முடிக்க எல் அண்ட் டி நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், மக்களவைத் தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
Read More – வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பானிஷ் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.!
இதுகுறித்து அவர் கூறியதாவது, 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது மக்களவை தேர்தலுக்காகவே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கியுள்ளது. இந்தாண்டு டிசம்பரில் பொதுத்தேர்தல் என இருந்தால் நவம்பரில் தொடங்கி இருப்பார்கள். மூன்று முறை தமிழ்நாடு வந்த பிரதமர், மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பிய அவர், இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை எனவும் குற்றசாட்டியுள்ளார்.