மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி எய்ம்ஸ் தலைவராக மருத்துவர் நாகராஜனை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த நிலையில், இவர் நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராகவும் , சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சார் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.