மதுரை எய்ம்ஸ் – சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

EIAClearance

மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சுழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது.

சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ல் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

தென்மாவட்ட பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் கிளாம்பாக்கம் தான்.! நடைமேடை விவரங்கள் இதோ…

ஆனால் இந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த கட்டுமான பணிகளுக்கான திட்ட மேலாண்மை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருந்தாலும், எப்போது தொடங்கப்படும் என்ற தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளானது மதுரை எய்ம்ஸ். இந்த நிலையில், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்