மதுரை அதிமுக மாநாடு.! வலையங்குளம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு..!
மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார்.
அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் சிறப்புரைக்கு முன்னர் 10க்கும் மேற்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பல முக்கிய அதிமுக தலைவர்கள் இந்த கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், மதுரை அதிமுக மாநாடு நடக்கும் வளையங்குளம் பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநாட்டை தொடர்ந்து போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடக்கும் பகுதியிலேயே வாகனங்களை அனுமதிப்பதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
மேலும், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் 4 வழிச்சாலையில் இரண்டு பகுதிகளில் நீண்ட நேரமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உருவாகியுள்ளது. இதற்கிடையில், மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.