மதுரையில் செவிலியர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் செவிலியர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 1937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1101 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று(ஏப் 27) மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செவிலியர்கள், கர்ப்பிணி பெண் மற்றும் கர்ப்பிணி பெண்ணின் தாயார் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது.