திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். – வியாபாரிகள் கூட்டமைப்பினர்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் அதிமுகவின் இந்த முடிவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக திருச்சியில் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்காவிட்டால் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கையில், ‘திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை மறந்து தற்போது மதுரையை இரண்டாவது தலைநகரம் மாற்றுவோம் என கூறி வருவது எம்ஜிஆரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம்.
ஜாதி மதம் என கலவரம் இல்லாத பூமி திருச்சி. தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சை அமைச்சர்கள் எதற்காக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விளக்கம் தரவேண்டும். அடுத்த சில வாரங்களில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. இந்த பிரச்சினை குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது.’ எனவும் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…