எம்ஜிஆர் கூற்றை தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர்.! – வியாபாரிகள் கூட்டமைப்பினர் வருத்தம்.!

Default Image

திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். – வியாபாரிகள் கூட்டமைப்பினர்.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் அதிமுகவின் இந்த முடிவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக திருச்சியில் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்காவிட்டால் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கையில், ‘திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை மறந்து தற்போது மதுரையை இரண்டாவது தலைநகரம் மாற்றுவோம் என கூறி வருவது எம்ஜிஆரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம்.

ஜாதி மதம் என கலவரம் இல்லாத பூமி திருச்சி. தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சை அமைச்சர்கள் எதற்காக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விளக்கம் தரவேண்டும். அடுத்த சில வாரங்களில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. இந்த பிரச்சினை குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது.’ எனவும் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்