ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து YBM மற்றும் வெற்றி ஆகிய தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், போக்குவரத்து ஆணையரின் புதிய கட்டுப்பாடு 20 ஆண்டுகால நடைமுறைக்கு எதிரானது என்றும், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதாவது, பயணிகள் மட்டுமின்றி, ஆம்னி பேருந்து நிறுவனங்களும் அசவுகரியத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையர் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்