NLC-யில் தொடர் விபத்துக்கள்.. தொழிலாளர்கள் உயிரிழப்புகள்.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

NLC Neiveli - Madras High court

கடந்த 2020ஆம் ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பாய்லர் பகுதி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோதண்டம், முத்து கண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, விபத்தில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்ஜாமீன் மீது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதில், என்எல்சியில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் தொழிலாளர்கள் இழப்பு சம்பவம் நிகழ்கின்றன. இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்சி தரப்பில் இருந்து உரிய இழப்பீடு, கருணை தொகை வழங்கப்படவில்லை என வாதிடப்பட்டது

இதனை அடுத்து , என்எல்சி தரப்பு வாதிடுகையில்,  விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதாகவும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு வேலை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆட்சேபனை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, என்எல்சியில் ஓரிரு முறை விபத்து என்றால் எதோ தொழிலாளர்கள் கவனக்குறைவு என எடுத்துக்கொள்ளலாம். தொடர் விபத்து உயிரிழப்பு என்றால் அதனை எப்படி எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் , இந்த வழக்கு விசாரணயை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்