தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Dhanush - Nayanthara

சென்னை: நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீதான விசாரணையை இன்று (ஜன.8ம் தேதி) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தினார்

இதையடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்