நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது தொடர்பான வழக்கு குறித்து சென்னை உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோருக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற 68-வது பொதுக்குழுக் கூட்டத்தில், கட்டிடப் பணிகளுக்குத் தேவையான நிதி காரணமாகவும், தேர்தல் நடத்துவதால் ஏற்படும் செலவுகள் மற்றும் பணிகளுக்குப் பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க பொதுக்குழு ஆதரவு அளித்தது.
இருப்பினும், பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமானது என இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நிர்வாகிகளின் பதவிக் கால நீட்டிப்பு முறையாக விதிகளைப் பின்பற்றியதா? என்பது குறித்து நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த சூழலில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஜூன் 4ம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025