காமராஜ் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

KAMARAJ

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவுத் துறை அமைச்சராக இருந்த போது, பொருட்கள் கொள்முதலில், ரூ.350 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்டத்தில் பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்திருந்தார்.  இதுதொடர்பாக 2018ம் ஆண்டு புகார் அளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் காமராஜர் மீதான முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பினர். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்பின், ரூ.350 கோடி முறைகேடு புகார் மீதான நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தர லஞ்சஒழிப்புத்துறை உத்தரவிட்டு, காமராஜ் மீதான புகார் குறித்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

6 மாதங்களில் விசாரணையை முடிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்று வழக்குகளை முடித்து வைத்தார் சென்னை உயர்நீதிமன்றம். மேலும், புகார்தாரர்கள் இருவரையும் டிசம்பர் 6ம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்