இதுதான் நிபந்தனை… பணிப்பெண் விவகாரத்தில் திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.!
Anto Merlina – கடந்த ஜனவரி மாதம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா, ஆகியோர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
நீலாங்கரை பகுதியில் வசித்து வந்த ஆண்டோ மற்றும் மெர்லினா ஆகியோர் வீட்டில் பணிப்பெண்ணாக 17 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அந்த பணிப்பெண் அளித்த புகாரின் பெயரில் நீலாங்கரை பெண்கள் காவல் நிலையத்தில் வன்கொடுமை (சாதிய ரீதியில் திட்டுவது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Read More – ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்
பின்னர், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த ஆண்டோ மற்றும் மெர்லினாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தனர்.
Read More – சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்த ஜாமீன் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பணிப்பெண் மற்றும் காவலத்துறை தரப்பில் இருந்து ஜமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தும், விசாரணை முறையாக நடைபெற்று வருவதாகவும், இதுவரை 16 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதனை அடுத்து 2 வாரங்களுக்கு நிலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டோ மற்றும் மெர்லினா ஆகியோர் விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி ஜாமீன் வழங்கினார் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார்.