அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10வது முறையாக நீட்டிப்பு.!
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இதை அறுவை சிகிச்சை முடிந்து, அமலாக்கத்துறை விசாரணை காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன் பிறகு 9வது முறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது நீட்டிக்கப்பட்டு இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் (இன்று) தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
நீட் தேர்வால் இன்னோர் உயிர் போய்விடக்கூடாது… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!
இதனை தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற காவலானது நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 10வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்து தள்ளுபடி செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது . இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.