பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முரசொலி நிலம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதாவது, பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை – நாளையும் இந்தந்த மாவட்டங்களில் விடுமுறை!
இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றுது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு எதிராக முரசொலி சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…