திமுக எம்.பி கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கு! நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம்
நடந்து முடிந்த நானடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டு வேற்று பெற்றார். இவரை எதிர்த்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட்டு இருந்தார். கனிமொழி, தமிழிசையை விட சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து, தமிழிசை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், ‘ திமுக எம்பி கனிமொழி வேட்புமனுவில் குறை இருந்தது. அதனை நாங்கள் ( தமிழிசை தரப்பு ) கூறியும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. கனிமொழியின் கணவன், மகன் ஆகியோரின் சொத்துக்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை. மேலும், வாக்காளருக்கு 2000 ரூபாய் திமுக சார்பில் கொடுக்கப்பட்டது.’ என்ற புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்றம் தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.