தூத்துக்குடி துப்பாக்கி சூடு : 2 வாரம் அவகாசம்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Madras High Court comment on Thoothukudi Sterlite Protest

தூத்துக்குடி: கடந்த 2018 மே 22ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தபட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை மனித உரிமை ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளையும், சம்பவம் தொடர்பான விசாரணையில் தங்கள் அதிருப்தியையும் நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை முறையாக நடைபெறவில்லை. விசாரணை ஒருதலை பட்சமாக நடைபெற்றுள்ளது. போராட்டம் நடந்த இடத்தை தாண்டி குடியிருப்பு பகுதிகளிலும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அப்படி இருக்கையில், இந்த வழக்கில் எந்த அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

100 நாள் போராட்டத்தில் எத்தனை நாட்கள் வன்முறை நடைபெற்றது.? அதுபற்றிய தரவுகள் வேண்டும். துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில் அந்த 1 மாத காலம் வரையில் பொறுப்பில் இருந்த அனைத்து காவல்த்துறை அதிகாரிகளின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை சேகரிக்க வேண்டும். அதற்கு 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது என கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்