கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது..! சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.!
சென்னை: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தங்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்திருத்தம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்று மற்றம் செய்யப்பட்டது.
அதே போல, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்றும், இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்றும் மாற்றம் செய்யப்பட்டு அந்த சட்டப்பிரிவில் மாற்றங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டதிருத்தமானது, கடந்த 2023இல் பாஜக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றம் செயப்பட்டது. மாற்றுமொழி கலப்பு, சட்டதிருத்தத்தில் மாற்றம் ஆகியவை குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
திமுக சார்பில் அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் நடைபெற்றது .
அப்போது, நீதிபதி அமர்வு கருத்து கூறுகையில், புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அமல்படுத்துவதற்கு முன்னர் சட்ட ஆணையத்தை முறையாக ஆலோசித்து இருக்க வேண்டும் என கூறி, 4 வாரங்களில் இந்த சட்டத்திருத்தம் அமல்படுத்தியது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து.