பதஞ்சலி நிறுவனம் தயாரித்த “கொரோனில்” மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, பல நாடுகள் தடுப்பு மருந்துகளை தயாரித்து, சோதனை செய்யும் முயற்சியில் தீவிரமடைந்து வருகின்றனர். அந்தவகையில், கொரோனா சிகிச்சைக்கு யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான “கொரோனில்” மருந்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த மருந்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை அந்நிறுவனம் தயாரித்து வருவதாகவும், அதற்க்கு கொரோனில் என்ற பெயருக்கு வணிகச்சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த வணிகச் சின்னம் 2027 ம் ஆண்டு வரை அமலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அந்த தடையை நீக்கக் கோரி பதஞ்சலி, திவ்யா யோக் மந்திர் நிறுவனங்கள் மனுதாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அமர்வு, வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் மருந்துகளை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்தை 2 வாரங்கள் பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மருந்திற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையும், ரூ.10 லட்சம் அபராதமும் நிறுத்திவைத்தும் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…