இன்று முதல் சென்னை மாவட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு.!
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது குறித்த தகவல் இதுவரை தமிழக அரசு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது . மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் புத்தகங்கள் கொடுப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் “டிவி” சேனல்கள் வழியே பாடங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தொலைகாட்சியில் பாடங்கள் நடத்தப்படுவதால் பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என புத்தகங்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.