மதுசூதனன் மனைவி காலமானார்.., முதல்வர் இரங்கல்..!
ஜீவா மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மதுசூதனனுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டரில் கழக அவைத் தலைவர் மரியாதைக்குரிய திரு.மதுசூதனன் அவர்களின் மனைவி திருமதி. ஜீவா மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திருமதி.ஜீவா மதுசூதனன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
திருமதி.ஜீவா மதுசூதனன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.(2/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 19, 2021