மதுரையில் ரூ.16 கோடி செலவில் தமிழன்னை சிலை அமைக்கப்படும்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
மதுரையில் ரூ.16 கோடி செலவில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.2 கோடி கோரப்பட்டுள்ளது. ரூ.56 கோடியில் மதுரையில் தமிழர் பண்பாட்டு மையம் அமைய உள்ளது. மதுரையில் ரூ.16 கோடி செலவில் தமிழன்னை சிலை, ரூ.6 கோடி செலவில் நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.