யுடியூபில் 20 மணி நேரம் வேலை பார்த்தவர் மதன் – கிருத்திகா

Published by
லீனா

மதன் 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் யூடியூபில் வேலை பார்க்கிறார் என மதன் மனவிவி கிருத்திகா தெரிவித்துள்ளார். 

ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட புகார்களில் கைதாகி சிறையில் உள்ள மதன் மீது குண்டர் பாய்ந்தது. இதனையடுத்து, பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த 10 வருடங்களாக நாங்கள் எந்த சொத்துக்களும் வாங்கவில்லை. நாங்கள் சொகுசு கார்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கார் இதுவரை வாங்கவில்லை. அது எங்களுடைய பெயரில் இல்லை. அவர் வைத்திருப்பது ஒரே ஒரு கார் தான், அது ‘ஆடி ஏ6’. அதுவும் நாங்கள் உழைத்து வாங்கியது தான்.

நாங்கள் இருக்கிறது வாடகை வீடு. அது சொந்த வீடு கூட கிடையாது. மதன் 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் யூடியூபில் வேலை பார்க்கிறார். 4 மணி நேரம் மட்டுமே ஓய்வெடுக்கிறார். வியூவர்ஸ் மூலமாக தான் வருமானம் வருகிறது. மற்ற எந்த வழிகளிலும் எங்களுக்கு வருமானம் வரவில்லை. மதனின் யுடியூப் சேனலை தடை செய்து விட்டனர். என்னுடைய வங்கி கணக்கு தொடர்பான சான்றுகள் மற்றும் டெபிட் கார்ட் போன்றவை போலீசில் தான் உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. விசாரணைக்கு அழைத்த போது, எனது 8 மாத கைக்குழந்தையோடு தான் சென்றேன். அவர்கள் நான் சொன்னதை கேட்டார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் அவருடன் பப்ஜி விளையாடியதற்கான எந்த சான்றும் இல்லை. என்னுடைய வங்கி கணக்கை மட்டும் தான் அவர் பயன்படுத்தினார். இதற்காக மட்டும் தான் என்னை கைது செய்தனர் எனக் கூறியுள்ளார்.

 மேலும், நான் இதுவரை பாப்ஜி விளையாடியதில்லை. என்னுடைய குரல் அவருடைய வீடியோவில் வந்ததில்லை. எங்கள் மீது 200 குற்றசாட்டுகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதற்கான சான்றுகளை எங்களுக்கு காண்பித்தால் நன்றாயிருக்கும். தற்போது அவர் மீது குண்டாஸ் போட்டுள்ளனர். ஆனால், அவர் மீது சரியான ஒரு கேஸ் இல்லாமல் எப்படி குண்டாஸ் போட்டார்கள் என்று தெரியவில்லை. பண மோசடி செய்ததாக கூறுகின்றனர். ஆனால் இதற்கான சான்றுகளும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கிருத்திகா தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

3 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

4 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

4 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

5 hours ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

6 hours ago