ஒரு வீடியோ கூட போடாமல் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை கவர்ந்த மதன் கௌரி.!

Default Image

மதன் கௌரி ஆரம்பித்துள்ள IR WOG எனும் யு-டியூப் சேனலில் இன்னும் ஒரு வீடியோ கூட போடவில்லை அதற்குள் அந்த சேனலை 1.17 லட்சம் பேர் பின்தொடருக்கின்றனர். 

தமிழ் யு டியூப் சேனல்களில் மிக பிரபலமானவர் மதன் கௌரி. இவர் பதிவிடும் விடீயோக்கள் யு டியூபில் சில மணி நேரங்களிலேயே பல  லட்சம் பார்வையாளர்களை கடந்து விடும். அந்தளவிற்கு தமிழ் யு டியூப் சேனலில் இவரது பெயர் இணையதளவாசிகள் மத்தியில் பிரபலம். 

இவர் தற்போது IR WOG  எனும் புதிய யு டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அந்த சேனலில் இன்னும் ஒரு வீடியோ கூட போடவில்லை அதற்குள் 1.17 லட்சம் பேர் IR WOG யு டியூப் பக்கத்தை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இந்த வளர்ச்சி இணையதளவாசிகளை மிரள செய்துள்ளது.

மதன் கௌரி தனது விடீயோக்கள் மூலம், உள்ளூர் முதல் உலக நடப்புகள் வரையில் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என அவரது கருத்துக்களை வீடியோ மூலம் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest