மழைக்கால முன்னெச்சரிக்கைகள்.! மாணவர்களுக்காக நடமாடும் மருத்துவ வாகனங்கள்.! அமைச்சர் புதிய தகவல்.!
தமிழகத்தில் மழைக்காலத்தில் மக்களை காய்ச்சல் போன்ற நோயில் இருந்து காக்க, எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் , பொதுமக்கள் சுகாதாரத்தத்திற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதில் இருந்து, தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுமார் 11 ஆயிரம் மருத்துவமனைகளை தாண்டி, புதியதாக ஹெல்த் அண்ட் வெல்த் கேர் எனும் 708 மருத்துவமனைகள் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 60 நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன.
தமிழகத்தில் இயங்கும் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கல்லூரி முதல்வர்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களை இந்த மழை நேரத்தில் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் பெரும்பாலும் குறைந்துவிட்டது.
மேலும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பள்ளி மாணவர்களை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் இந்த வாகனங்கள் சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உள்ளது.