எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!
தமிழ்நாடு அரசு எம்-சாண்டு , பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தினர்.
அதன்படி, யூனிட் ஜல்லி விலை ரூ.4,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் விலை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும், பி.சாண்ட் விலை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், எம்-சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்படட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்திடவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33/- நிர்ணயித்திடவும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, குவாரி உரிமையாளர்கள் அறிவித்த எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வால், கட்டுமான பணிகளுக்கான செலவு அதிகரிக்கும். இதனால், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் கே.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.