சென்னை பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டிலிருந்து எம்.பில் பட்ட படிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இதன் இணைப்பு கல்லூரிகளில் எம்.பில்., பட்டப்படிப்பு 2021-2022 கல்வியாண்டிலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைப்படி, எம்.பில்., பட்டப்படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தனர். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு(எம்.பில்.,) முடித்தவர்கள் கல்லூரிகளில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தனர். மேலும், இந்த பட்டப்படிப்பை இனி பயிற்றுவிக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
தற்போது சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 18 ஆம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு 2021-2022 லிருந்து பல்கலைக்கழக துறைகள், இணைப்பு கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் எம்.பில்., பட்டப்படிப்பு நிறுத்தப்படுகிறது.
அதனால் இந்த கல்வியாண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டபடிப்பிற்கான சேர்க்கை நடைபெறாது. மேலும், இதற்கு முன்னர் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் படிப்பை முடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…