டிக்கெட் எடுக்க தெரியாத கலைஞர்! பசியுடன் பயணம் செய்த நெகிழ்ச்சியான பகிர்வு!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியும் கவியரசு கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பிரிந்துவிட்டனர். இருந்தாலும் இருவருக்குமான தமிழ் இலக்கிய போர் எப்போதும் சுவாரஸ்யமாக இருந்தது.

இருவரும் அரசியலில் ஆரம்பகட்டத்தில் சேலத்திற்கு பயணிக்கையில் ரயிலில் டிக்கெட் எடுக்க கலைஞருக்கு தெரியாததால், தனது நண்பரான கண்ணதாசனிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லியியுள்ளார். அவரோ முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துவிட்டார்.

இதனால் இருவருக்கும் கையில் பணம் இல்லை. ஆதலால் பசியுடன் தங்களது பயணத்தை தொடர்ந்துள்ளனர். பின்னர், சேலம் ரயில் நிலையத்தில் கருணாநிதியின் அம்மையார் கொண்டுவந்த புளியோதரையை இருவரும் சாப்பிட்டு பசியாறியுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கலைஞர் கருணாநிதி தன் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்