“வருக வருக என வரவேற்கிறேன்”! செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

15 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MK Stalin

சென்னை : அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் 471 நாட்கள் விசாரணையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி வெளியில் வரவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 15 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.

அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.

கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது”, என பதிவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்